கொலிவுட்டில் விஜய் நடித்து வரும் ஜில்லா படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன்னர் தொடங்கியுள்ளது.
சென்னையில் பிற பகுதிகளில் படமாக்க திட்டமிட்டிருக்கும் இப்படத்தின் விஜய்யின் கதாபாத்திரம் குறித்து சுவாரஷ்யத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு துப்பாக்கி படம் வெளியான போது, தங்கள் மதத்தை இழிவுபடுத்தும் விதத்தில் காட்சிகள் இருப்பதாக முஸ்லிம் அமைப்புகள் கூறியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், முஸ்லிம் மதத்தின் மீது நாங்கள் மரியாதை வைத்திருக்கிறோம். முஸ்லிம்களை புண்படுத்தும் காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்படும்.
முஸ்லிம் நண்பர்களை கஷ்டப்படுத்தியதற்கு பிராயச்சித்தமாக விஜய் விரைவில் ஒரு படத்தில் முஸ்லிமாக நடிப்பார் என்று கூறினார்.
விஜய் இந்த வாக்குறுதியை ஜில்லா படத்தில் நிறைவேற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் முஸ்லிம்கள் வைப்பது போன்ற குறுந்தாடியை வைத்திருந்தார். ஜில்லா படப்பிடிப்பு தளத்தில், விஜய்யின் உறவினர்களாக நடிப்பவர்கள் முஸ்லிகளுக்குரிய டிரஸ் கோடில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுக்குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
ஜில்லாவில் விஜய் முஸ்லீமாக: விஜய்யின் கதாபாத்திரம் குறித்த சுவாரஷ்யத் தகவல்.
Written By TamilDiscovery on Sunday, July 7, 2013 | 4:17 AM
Related articles
Labels:
Cinema
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !