அனைவருக்குமே அழகாகவும், வெள்ளையாகவும், முகம் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு.
இதற்காக கடைகளில் விற்கும் நிறைய அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஆனால் எந்த பலனும் இருக்காது.
இதற்கு ஒருசில இயற்கையான முறைகளை பின்பற்றினாலே அழகாக மாறலாம்.
முகத்தை கழுவுதல்:
முகத்தில் தூசிகள் படிந்திருப்பதால் முகம் பொலிவின்றி காணப்படும்.
எனவே அவ்வப்போது முகத்தை சுத்தமான நீரினால் கழுவினால், முகம் நன்கு சுத்தமாக பருக்களின்றி இருக்கும்.
ஃபேஸ் பேக்:
முகத்தில் உள்ள கருமையைப் போக்குவதற்கு நிறைய ஃபேஸ் மாஸ்க்குகள் உள்ளன. அத்தகைய மாஸ்க்குகள், ஸ்கரப்கள் போன்றவற்றை மேற்கொண்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, சருமத்தின் நிறம் இயற்கையாகவே அதிகரிக்கும்.
எலுமிச்சை:
எலுமிச்சை ஒரு சூப்பரான ப்ளீச்சிங் பொருள். இத்தகைய எலுமிச்சையின் துண்டுகள் அல்லது சாற்றைக் கொண்டு, தினமும் முகத்தை சிறிது நேரம் தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் பொலிவோடு மின்னும்.
பழங்கள்:
பழங்களில் வாழைப்பழம், பப்பாளி, அவகேடோ போன்றவை சருமத்திற்கு பொலிவைத் தரக்கூடியவை.
எனவே இத்தகைய பழங்களை சாப்பிடுவதோடு சருமத்திற்கு தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சூரியக் கதிர்களின் தாக்கம்:
சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களால் சருமத்திற்கு கடுமையான பாதிப்பானது ஏற்படுவதோடு, சருமத்தின் நிறமும் மாறும்.
எனவே சருமம் வெள்ளையாகவும், நிறம் மாறாமலும் இருப்பதற்கு வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்கவும்.
அப்படியே வெயிலில் சுற்றினால் சருமத்திற்கு சன் ஸ்கிரீன் லோசனை தடவி செல்ல வேண்டும்.
குறிப்பாக வீட்டிற்கு வந்ததும் சருமத்தை சுத்தமான நீரினால் கழுவிட வேண்டும்.
தயிர் மசாஜ்:
தயிர் முகத்தை வெள்ளையாக்க உதவும் அழகுப் பொருட்களில் ஒன்று. எனவே அதனைக் கொண்டு தினமும் முகத்திற்கு மசாஜ் செய்து கழுவினால், 7 நாட்களில் ஒரு நல்ல முகப்பொலிவு கிடைக்கும்.
கிளின்சிங்:
கற்றாழை ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். எனவே கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்து நீங்கி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
தண்ணீர் குடிக்கவும்:
தினமும் அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமம் மின்ன ஆரம்பிக்கும்.
உடற்பயிற்சி:
முகத்தில் ஒரு நல்ல பொலிவு வரவேண்டுமெனில் மேற்கூறியவற்றுடன் தினமும் காலையில் எழுந்து லேசான உடற்பயிற்சிகளை தவறாமல் மேற்கொண்டால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முகத்தில் உள்ள சோர்வு நீங்கி, இயற்கையாகவே முகம் அழகாக இருக்கும்.
Home »
Beauty-Tips
» ஒரே வாரத்தில் பளபளப்பான அழகைப்பெற வேண்டுமா?
ஒரே வாரத்தில் பளபளப்பான அழகைப்பெற வேண்டுமா?
Written By TamilDiscovery on Monday, June 17, 2013 | 7:43 AM
Related articles
- முடி உதிர்வதற்கான மருத்துவ காரணங்களும், இயற்கைத் தீர்வுகளும்.
- அழகைக் கெடுக்கும் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் நீங்க எளிய முறைகள்.
- முகத்தை பளபளப்பாக்கும் இயற்கையான வீட்டு ஃபேஷியல்.
- உங்கள் பளீச் முகத்தின் அழகைக் கெடுக்கும் முகப்பருவைப் போக்க எளிய வழிகள் சில!
- வேறும் ஏழே நாட்களில் ஒளிரும் வெண்மை அழகைப் பெற்றிட.
- சிறுநீரகத்தை ஆரோக்கியமாக பேண மிகச்சிறந்த சைவ உணவுகள்: சிறுநீரகக் கற்ககளை அளிக்கும்!
Labels:
Beauty-Tips
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !