நெல்சன் மண்டேலா உயிரிழந்துவிட்டதாக தவறாக பேசிய அவுஸ்திரேலிய அமைச்சர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல்நிலை மிக மோசமாக உள்ளது. இந்த நிலையில், இவர் உயிரிழந்து விட்டதாக, அவுஸ்திரேலிய மேம்பாட்டு துறை அமைச்சர் கேரிகிரே தவறாக பேசினார்.
ஒரு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, அவர் இந்த தகவலை வெளியிட்டார். இது தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலியர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் பிரதமர் பதவியில் இருந்து ஜீலியா கிலார்ட் விலகியதை அடுத்து, கான் பெர்ராவில் உள்ள பாராளுமன்ற இல்லத்தில் விருந்து நடந்தது. அதில் பங்கேற்ற அமைச்சர் கேரி கிரே பேசும் போது, ‘‘மண்டேலா குறித்து தவறாக பேசியதற்காக நான் மனமுவந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.
மேலும், அவுஸ்திரேலியாவுக்கான தென்னாபிரிக்க தூதருக்கும் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்துக்கும் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !