பங்களாதேஷ் பிரதமருக்கு, கொலை மிரட்டல் விடுத்த பேராசிரியர் ஒருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் பிரதமராக ஷேக் ஹசீனா பதவி வகித்து வருகிறார். இவருக்கு 'பேஸ்புக்' இணையத்தளத்தில் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது.
இது குறித்து பொலிசார் வழக்குபதிவு செய்து பங்களாதேஷ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் ஹபிஷூர் ரஹ்மான் (28) என்பவரை கைது செய்தனர்.
இவர் மீது மெட்ரோ பாலிட்டன் செசன்சு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !