சந்திரனில் ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, குரங்கு வடிவத்தில் உள்ள ரோபோக்களை உபயோகிக்க ஜேர்மனி ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தோற்றத்தில் ஒரு குரங்கை போலவே இருக்கும் இந்த ரோபோக்களால் சந்திரனின் மேற்பரப்பில் மிக எளிதாக கடக்கமுடியும்.
ஆய்வு பணியின் போது ஏதேனும் கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்துவிட்டால் கூட இந்த ரோபோக்கள் தானாவே எழுந்து நிற்கும் திறன் வாய்ந்தவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ரோபோவிற்கு கைகள் மற்றும் கால்கள் போன்ற அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளதால் இந்த குரங்கு ரோபோக்கள் சந்திரனில் உள்ள பாறைகளின் மீது ஏறி மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கிரகங்களில் ஆய்வு மேற்கொள்ள அனுப்பும் விண்கலங்கள் சக்கரம் மூலம் நகர்த்தப்பட்டு ஆய்வில் ஈடுபடுத்தப்படுகிறது. மிக உயரமான இடங்களில் ஆய்வு மேற்கொள்ள புதுவிதமான முறையில் இந்த “ரோபோ” வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த குரங்கு வடிவ ரோபோ வரும் ஆகஸ்ட் மாதம் சந்திரனுக்கு அனுப்பப்படுமென தெரிகிறது.
Home »
Technology
» சந்திரனில் ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கும் நம் மூதாதையர். (குரங்கு ரோபோக்கள்)
சந்திரனில் ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கும் நம் மூதாதையர். (குரங்கு ரோபோக்கள்)
Written By TamilDiscovery on Friday, June 28, 2013 | 10:18 AM
Labels:
Technology
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !