ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி மாளிகை மீது தலிபான்கள் இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அந்நாட்டு நேரப்படி காலை 6.30 மணியளவில் காபுலில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை மீது முதல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆயுததாரியொருவர் முதலில் மாளிகையின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினருக்கும், ஆயுததாரிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. நீண்ட நேரம் மோதல் இடம்பெற்றதாகவும், தலிபான்கள் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் நடத்திய அனைவரும் பின்னர் கொல்லப்பட்டதாக ஆப்கான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மாளிகை, அங்குள்ள சி.ஐ.ஏ.வின் தலைமையகமாகக் கூறப்படும் ஹெரியான ஹோட்டல், அதனைச் சூழ உள்ள கட்டிடங்கள் என பலவற்றை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதலை தாமே நடத்தியதாக தலிபான் அமைப்பினர் ஊடகவியலாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளனர்.
தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது தொடர்பில் எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !