Headlines News :
Home » » பெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.

பெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.

Written By TamilDiscovery on Tuesday, June 25, 2013 | 10:39 AM

பெண்களுக்கு உடல்ரீதியாக ஏற்படும் சிக்கல்கள் மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் வெள்ளைப்படுதலும், பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுநோயும் அவர்களுக்கு உளவியல் ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது.

பெண்களில் இனப் பெருக்க உறுப்புகளில் சுரப்பு என்பது இயற்கையான ஒன்றுதான். எவ்வாறு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவுகளில் உடலில் வியர்வை உண்டாகின்றதோ அதே போல பெண்களின் பெண் உறுப்பில் சுரப்பு ஏற்படும். பெண்கள் இயற்கையான இயல்பான சுரப்பிற்கும் வெள்ளை படுதலுக்கும் உள்ள வித்தியாசங்களை உணர்வது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

வெள்ளைபடுதல் என்பது அதிகமான வெள்ளை நிற அல்லது மஞ்சள் நிறமான அளவிற்கு அதிகமான சுரப்பினைக் குறிக்கும். பல சமயம் அரிப்புடன் சேர்ந்து இருக்கும். இதற்கு அடிப்படை காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் பெண் உறுப்பில் பூஞ்சை வளர்ந்து தொற்றினை உண்டாக்கும்.

நீரிழிவு வியாதி, உடல் பருமன் காரணமாகவும், கர்ப்பம் அல்லது கருத்தடை மாத்திரைகளால் ஹார்மோன் அளவுகள் மாறி இந்த காளான்கள் வளர சரியான சூழ்நிலை உண்டாகிறது. இந்த காளான் வகை தொற்றுக்கிருமிகள் சளி, காய்ச்சல் முதலியவற்றுக்காக சாப்பிடும் மாத்திரைகளாலும் அதிகமாக வளர்ச்சி அடைந்து அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதலை உண்டாக்குகின்றது.

வெள்ளைப்படுதல், நோய் கொழுப்பு சத்து உணவுகள் சர்க்கரை இவைகளால் உண்டாகிறது. அதுவும் உங்கள் உடல் பருமனாக இருந்தால் இந்த உணவு வகைகளை தவிர்க்கவும். நிறைய பழங்கள், காய்கறிகள், தானியங்கள், சத்துள்ள பயறு வகைகள் சாப்பிடவும். தினமும் 6 லிருந்து 8 டம்ளர் தண்ணீர் குடிக்கவும். அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் நோய்க்கு வாசனை அதிகமுள்ள சோப்புக்கள், குளிப்பதற்காக உபயோகிக்காதீர்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

வெள்ளைப்படுதல் நிற்க:

காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை எடுத்து தூளாக்கி டீ போடுவது போல கஷாயமாகப் போட்டு தினசரி பருகி வர வெள்ளைபடுதல் மறையும். இரவு நேரத்தில் சிறிதளவு கொத்தமல்லியை ஊறவைத்து அந்த தண்ணீரை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். வாழைப்பழம் சாப்பிடுவதற்கு எற்றது. தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிட வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

மனஅழுத்தமோ, உளைச்சலோ இருந்தால் வெள்ளைப்படுதல் ஏற்படும். எனவே ரிலாக்ஸ் ஆக இருங்கள். காலையிலும் மாலையிலும் உடற்பயிற்சி செய்யுங்கள். மிகவும் குளிர்ந்த நீரில் பிறப்புறுப்பினை 2 முறை தினசரி கழுவி வர வெள்ளைபடுதல் குறையும்.

சிறிது கடுக்காய், நெல்லிக்காய் தாண்றிக்காயை சம அளவு எடுத்துப் பொடி செய்து அதனை 2 லிட்டர் தண்ணீரில் காய்ச்சி வைத்துக் கொண்டு மிதமான சூட்டில் பெண் உறுப்பை கழுவி வந்தால் வெள்ளைபடுதல் மறையும்.

வால்நட் இலைகளை வேகவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி பிறப்புறுப்பினை கழுவ பயன்படுத்தலாம். யோகர்ட் சிறந்த மருந்துப் பொருளாக செயல்படுகிறது. அரிப்பு உள்ள இடத்தில் தயிரை பூசலாம். அதேபோல் மாங்காய் பவுடரை பேஸ்ட் போல செய்து பூசலாம்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் லோத்ரா பட்டையை நீரிலிட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு அந்த நீரால் காலை மாலை என இரு வேளை உறுப்பைக் கழுவி வர வெள்ளைபடுதல் கட்டுப்படும்.

வெள்ளைபடுதலுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் அசோகப் பட்டை லோத்ரா பட்டை போன்றவை சிறந்த பயன் தரக் கூடியவை. இவை சேர்ந்த பல ஆயுர்வேத தயாரிப்புகள் உள்ளன. அவற்றை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உபயோகித்து சிறந்த பலனைத் தரும்.

மேலும் விரிவாக.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template