ஊடகங்களின் விமர்சனங்களுக்கு பதில் கூறும் விதமாக மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளத்தில் எல்லாப் பெண்களும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகிறார்களா? என ஆவேசத்திடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீப காலமாக மேற்கு வங்கத்தில், பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகமாகி இருப்பதாக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்திப்பதற்காக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா சைக்கிளில் எல்லாம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து மம்தாவிற்கு எதிராக ஊடகங்களில் சிலர் ஆவேசமாக பேசி வருகின்றனர்.
மம்தாவும் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறார். இந்தநிலையில், கடந்த 2012-ம் ஆண்டு நாட்டிலேயே மேற்கு வங்கத்தில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக 30942 நடந்து இருப்பதாக தேசிய குற்றப்பதிவு துறை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், பர்க்கானாஸ் மாவட்டத்தில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கடுமையாக ஊடகங்களை கண்டித்துள்ளார்.
மேலும், அக்கூட்டத்தில் மம்தா கூறியதாவது, 'சில ஊடகங்கள் எதிர்கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு எங்கள் அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுக்கின்றன. மேலும் அரசுக்கு எதிராக அவர்கள் அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு அவர்கள் செய்வதால் மேற்கு வங்கத்திற்கு அவர்கள் அவமானத்தை கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு பிரச்சினைகாகவும் என்னை குறைகூறினார்கள்.
இப்பொழுது அவர்கள் கற்பழிப்பிற்காக என்னை கூட வசை பாடுகிறார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள். இங்குள்ள பெண்கள் அனைவரும் கற்பழிக்கப்படுகிறார்களா? 'என காரசாரமாக கேள்வி கேட்டுள்ளார் மம்தா.
பெண்கள் அனைவரும் கற்பழிக்கப்படுகிறார்களா? மம்தா பானர்ஜி ஆவேசம்!
Written By TamilDiscovery on Sunday, June 23, 2013 | 10:04 PM
Related articles
- இரயிலில் சில்மிஷம்: பெண்கள் கதறியும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
- அசிட் பருக்கி கொலை முயற்சி: 18 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
- பாபுவின் ஆசிரமத்திற்குள் கருக்கலைப்பு நிலையம்!
- இந்தியக் கடல் எல்லையில் அமெரிக் கப்பலில் ஆயுதக கடத்தல்?
- சாதுவின் கனவில் மன்னர்: 1,000 டன் தங்கப் புதையலை!
- ஆட்டையைப் போட்ட ஆட்டுடன் நகரமுடியாமல் தவிக்கும் மலைப் பாம்பு.
Labels:
India
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !