சவுதி அரேபியாவில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளை வார இறுதி நாட்களாக (விடுமுறை நாட்களாக) அறிவிக்க அந்த நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் வார இறுதி (விடுமுறை) தினங்களாக கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் அரபு நாடுகளில் மட்டும் நீண்ட காலமாகவே வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை தான் வார இறுதி நாட்களாக இருந்து வந்தது. இந்தநிலையில், இந்த நடைமுறையை மாற்றி வெள்ளி மற்றும் சனிக்கிழமையை வார இறுதி விடுமுறை தினமாக ஓமன் நாட்டின் அரசு கடந்த மாதம் அறிவித்தது. இதனையடுத்து, சவூதி அரேபிய அரசும் வெள்ளி மற்றும் சனிக்கிழமையை வார இறுதி தினங்களாக அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரையிலான ஐந்து நாட்களை வார வேலை நாட்களாக அங்கீகரித்து சவூதி மன்னர் அப்துல்லா ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் இதன் மூலம் வளைகுடாவில் உள்ள இதர நாடுகளுடன் வேலை நாட்களில் எளிதாகவும் விரைவாகவும் தொடர்பு கொள்ள முடியும் என சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !