தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் தயாராகி வெற்றிகரமாக ஓடிய படம் சந்திரமுகி.
இப்படம் முதலில் மணி சித்திரதாழு என்ற பெயரில் 1993-ல் ரீலிசானது. மோகன்லால், சுரேஷ்கோபி, ஷோபனா நடித்து இருந்தனர். பின்னர் இதை கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் டைரக்டர் பி.வாசு ரீமேக் செய்தார். விஷ்ணு வர்த்தன், சவுந்தர்யா நடித்தனர்.
அதன் பிறகு இப்படம் தமிழில் சந்திரமுகி என்ற பெயரில் தயாரானது. பி.வாசுவே இயக்கினார். ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடித்தனர். தமிழகம் முழுவதும் இந்த படம் மெகா ஹிட்டானது. வசூலிலும் சாதனை படைத்தது.
இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் மலையாளத்தில் மீண்டும் தயாராகிறது. இதற்கு கீதாஞ்சலி என பெயரிட்டுள்ளனர். மோகன் லால், ஷோபனா முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.
தமிழிலும் சந்திரமுகி 2-ம் பாகத்தை எடுக்கவும் ரஜினியை அதில் நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !