நைஜீரியாவில் வடக்கு பகுதியில் சில ஆயுதம் ஏந்திய கும்பல் கிராமத்தினர் மீது தாக்குதல் நடத்தி ஆடுமாடுகளை கொள்ளையடித்து செல்வது வழக்கம். இவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து எச்சரிக்கை கொடுக்க அங்குள்ள கிராமங்களில் தனி குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அந்த கும்பலின் அட்டகாசம் தொடர்கிறது.
இந்நிலையில் 20-க்கும் மேற்பட்ட மாடு திருடர்கள் துப்பாக்கிகளுடன் மோட்டார் சைக்கிளில் கானோ பகுதியில் உள்ள கிசாரா கிராமத்திற்குள் புகுந்துள்ளனர். பின்னர் அருகிலிருந்த மலைப்பகுதிக்கு சென்ற சிலர், அங்கிருந்து கண்காணிப்புக் குழுவினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
சிலர் கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
வீடு வீடாக சென்று கண்காணிப்பு குழுவினரை குறிவைத்து அவர்கள் நடத்திய இந்த தாக்குதலில், 48 பேர் கொல்லப்பட்டனர். சாம்பரா மாகாணத்தில் இதுபோன்று மாடு திருடும் கும்பல்கள், கொள்ளை கும்பல்கள் அப்பகுதியில் தாக்குதல் நடத்தி நாட்டை மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இப்பகுதியில் செயல்பட்டு வரும் போகோ ஹராம் போராளிகளின் வேலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. ஆப்பிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடான நைஜீரியாவில் இதுபோன்ற தாக்குதல்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !