துபாயில் டிராம் வண்டிகள் அடுத்த ஆண்டு முதல் இயக்கப்பட உள்ளன. இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள டிராம் வண்டிகளின் சோதனை ஓட்டம் நேற்று பிரான்சில் நடைபெற்றது. பிரான்சில் உள்ள அல்ஸ்டாம் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த டிராம் வண்டிகள் மேற்கொண்ட 700கி.மீ சோதனை ஓட்டத்தில் மாறுபட்ட வேகங்கள், பாதுகாப்பு அம்சங்கள், வண்டிகளின் உந்துவிசை, பிரேக், அவசர நிறுத்தங்கள், கதவுகளின் இயக்கம், வண்டியின் சக்தி போன்ற அனைத்தும் பரிசோதிக்கப்பட்டன.
துபாய் அரசின் பல முக்கிய பிரமுகர்களாலும், அதிகாரிகளாலும் இந்த சோதனை ஓட்டம் மேற்பார்வையிடப்பட்டது. வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த வண்டிகளின் தயாரிப்பு பணி முடிவுற்று வண்டிகள் துபாய்க்கு அனுப்பப்படும். ஐரோப்பா கண்டங்களில் மட்டுமே காணப்படும் இந்த வகையான தரை வழியே இயக்கப்படும் டிராம் வண்டி முதன்முதலாக துபாய் நாட்டில் உள்ள அல் சுஃபோ நகரில் இயக்கப்பட உள்ளது.
மற்ற தள ஏற்பாடுகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, வரும் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த டிராம் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட உள்ளது. மொத்தம் 17 நிறுத்தங்களுடன், முதல் கட்டத்தில் 11 டிராம் வண்டிகளும், இரண்டாவது கட்டத்தில் 14 வண்டிகளும் போக்குவரத்தில் ஈடுபடும். கோல்ட் சூட், சில்வர் கிளாஸ் என்ற இரண்டு வகுப்புகளுடன் குழந்தைகள் மகளிருக்கென தனி வகுப்பும் இதில் இருக்கும். வண்டிகளின் உட்புறங்களும், நிறுத்தங்களும் கலைநயத்துடன் அலங்கரிக்கப்பட்டு, பொழுதுபோக்கு அம்சங்களையும் வெளிப்படுத்துவதாக அமையும்.
ஆரம்பத்தில் தினந்தோறும் 27 ஆயிரம் பயணிகள் பயணம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கும் அரசு, 2020க்குள் இந்த எண்ணிக்கை 66,ஆயிரத்தை தொடக்கூடும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !