லண்டனை சேர்ந்த இரண்டு வயது சிறுவனொருவனுக்கு, இந்த வயதிலேயே பல அமெரிக்க ஜனாதிபதிகளின், அறிவுத்திறனைவிட அதிக ‘ஐ.கியூ’ இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சராசரியாக வளர்ந்த மனிதனின் அறிவுத்திறனை ‘ஐ.கியூ’ அடிப்படையில் 90-109 புள்ளிகளாக விஞ்ஞானிகள் வரையறுத்துள்ளனர்.
110-119 புள்ளிகள் என்பது சிறந்த அறிவாற்றலாகவும், 120-140 மிகச் சிறந்த அறிவாற்றலாகவும், 140 புள்ளிகளை கடந்த நிலை என்பது மேதாவித்தனத்துக்கு உரிய அறிவாற்றலாகவும் கருதப்படுகிறது.
இவ்வகையில் ஒருவரின் அறிவுத்திறனை பட்டியலிடும் ‘மென்ஸா’ நிறுவனம் 1946 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. 45 நாடுகளில் இதன் கிளை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் இந்த ‘மென்ஸா’ நிறுவனம் தெற்கு லண்டனை சேர்ந்த சிறுவனான ஆடம் கிர்பி என்பவரை அதன் மேதாவிகள் வரிசையில் புதிதாக இணைந்துள்ளது. இதற்கு ஆடம் கிர்பி அவரது 2-வது வயதில் 141 ‘ஐ.கியூ’ புள்ளிகளுடன் இருப்பதே காரணம். சரியாகக்கூட பேசவே தொடங்காத நிலையில் அமெரிக்க ஜனாதிபதிகளைவிட அதிகமான அறிவாற்றலுடன் இந்த சிறுவன் விளங்குறான்.
இச்சிறுவன் பிறந்த 9 வது மாதத்தில் படிக்கத் தொடங்கி, தற்போது 100 வார்த்தைகளை எழுத்து கூட்டி வாசிக்கும் திறன் கொண்டுள்ளார்.
பத்தாம் வாய்ப்பாடு வரை மனப்பாடமாக ஒப்பிப்பதிலும், ஆங்கில எண்களை ஆயிரம் வரை பிழையின்றி சொல்வதிலும், ஜப்பானிய மற்றும் ஸ்பெயின் மொழிகளில் 20 வரை சொல்வதிலும் தேர்ச்சிபெற்ற இந்த அதிசய சிறுவனை உலகமே பார்த்து வியப்படைந்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !