பிரம்மாண்ட படகு:
இந்த படகு 42.5 மீட்டர் நீளமும், 16 மீட்டர் அகலமும், 52 டன் எடை கொண்டது.
ஐ-பேட் போதும்:
இந்த படகு கப்பல் கண்காணிப்பு தொழில்நுட்பத்துடன் இணைந்து இயங்குவதால், 50 மீட்டர் தூரத்திலிருந்து ஐ-பேட் மூலம் இந்த ஆடம்பர படகை இயக்க முடியும்.
செலவீனம்:
15 மில்லியன் டாலர் செலவில் இந்த ஆடம்பர படகு உருவாகியுள்ளது.
பயண தூரம்:
இந்த படகில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 6,500 கிமீ தொலைவுக்கு இடைநில்லாமல் பயணம் செய்ய முடியும்.
பிரத்யேக அமைப்பு:
கடல் அலையை எளிதில் கிழித்துக் கொண்டு தங்கு தடையில்லாமல் செல்லும் வகையில் பக்கவாட்டில் இரண்டு மிதவைகளுடன் வடிவமைக்கப்பட்டு இருப்பதை காணலாம்.
இடவசதி:
இந்த ஆடம்பர படகு 9 பயணிகளும், 6 படகு பணியாளர்களும் செல்வதற்கான வசதிகொண்டது.
அறைகள்:
ஆம்டபரமான படுக்கையறை, குளியலறை, சமையலறை, உணவுக் கூடம், கடலழகை ரசிப்பதற்கான திறந்தவெளி கூடம் ஆகியவை உண்டு.
எஞ்சின்:
எஞ்சின்:
இந்த
ஆடம்பர படகில் கேட்டர்பில்லர் சி18 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.
இந்த எஞ்சின் 1150 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதுதவிர, 110 எச்பி
ஆற்றலை வெளிப்படுத்தும் இரண்டு எஞ்சின்களும் உண்டு.
காக்பிட்:
காக்பிட்:
இதன் காக்பிட்டில் இரண்டு மாலுமிகள் அமர்ந்து இயக்கும் வகையில் இருக்கிறது.
பயன்பாடு:
பயன்பாடு:
இதனை
வாங்கியிருக்கும் ஆன்ட்டோ மெர்டன்(வயது 64) தனது மனைவியுடன்
இந்தோனேஷியாவில் இருக்கும் தனது தீவுகளுக்கு சென்று வருவதற்காக, இந்த
ஆடம்பர படகை ஆர்டர் செய்து வாங்கியுள்ளாராம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !