சென்னை: சுந்தர் .சி படங்களில் காமெடி தீயாய் இருக்கும். இளைய தளபதியுடன் இணைந்து சுந்தர்.சியின் காமெடி கலாட்டாவைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாய் இருக்க, விஜயை வைத்து தான் ஒருபோதும் படம் இயக்கப்போவதில்லை எனக் கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார் சுந்தர்.சி. சமீபத்தில் வெளியான ‘தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தின் ரசிகர்கள் காட்சியில் கலந்து கொண்டார் அப்படத்தின் இயக்குநர் சுந்தர்.சி. விழாவில் பேசும் போது, தான் ஒரு போதும் விஜயை ஹீரோவாக வைத்து படம் இயக்கப் போவதில்லை எனக் கூறினார். மேலும், விழாவில் ரசிகர்கள் முன்னிலையில் சுந்தர்.சி பேசியதாவது...
'தல' படம்:
'தல'அஜீத் நடிப்பில் நான் இயக்கும் படம் குறித்து அஜீத் அறிவித்தால்தான் நன்றாக இருக்கும். அவரிடம் (அஜீத்) நான் தனிப்பட்ட முறையில் பேசியவற்றை வெளிப்படையாக அறிவித்தால் அது அவருக்கு பிடிக்காது என்பது ரசிகர்களாகிய உங்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்த போதும் இருவரும் இணைகிற படத்தின் அறிவிப்பு விரைவில் வெளி வந்தாலும் வரலாம்.
கவுண்ட்மணி ரசிகன் நான்:
இருக்கிற காமெடியன்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தவர் கவுண்டமணிதான். மீண்டும் அவரோடு இணையும் நாளை எதிர்பார்க்கிறேன்.
நண்பர்கள் போல பழகுகிறார்கள்:
நான் சினிமாவுக்கு வந்தபோது நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என தனித் தனியாக இருந்தார்கள். படபிடிப்பு நடக்கும்போது ஒரு மரியாதை கலந்த பயம் இருக்கும் ஆனால் இப்போது அப்படியில்லை எல்லாரும் நண்பர்களைப் போல பழகுகிறார்கள் வயசு வித்தியாசம் பெரிதாக இல்லை. இதுதான் என் பாணியும் இப்போதுதான் சினிமா என் பாணிக்கு திரும்பியிருக்கிறது.
சான்ஸே இல்லை:
என்னிடம் ரசிகர்கள் அதிகம் கேட்பது நீங்கள் ஏன் இளையதளபதி விஜய்யுடன் ஒரு படத்திலும் இணையவில்லை என்று... ஒரு உண்மையை சொல்கிறேன் இப்போது மட்டுமல்ல எப்போதுமே நான் விஜய்யுடன் இணைந்து பணியாற்றவே முடியாது.
காரணம்:
காரணம் விஜய் எப்போதும் கதையை கேட்டு விட்டுதான் படம் நடிக்க ஒப்புக் கொள்வார்... எனக்கு கதை சொல்லி படம் எடுக்கத் தெரியாது... திரைக்கதை அமைக்கிற அளவுக்கு கதை சொல்ல வராது... இந்த சிக்கல் இருப்பதால் விஜய்யை வைத்து படம் எடுக்க என்னால் முடியவே முடியாது.
நான் ரசித்த படங்கள்:
‘உள்ளத்தை அள்ளித்தா' படத்திற்கு பிறகு நான் ரொம்ப ரசித்து இயக்கிய படம் ‘தீயா வேலை செய்யணும் குமாரு'... ஹன்சிகா, சந்தானம், சித்து என எல்லாரும் ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க..." என தெரிவித்தார் சுந்தர்.சி.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !