இந்தியாவில் இயற்கை சீற்றத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான உத்தரகாண்ட் மாநிலத்திற்கு நிவாரண உதவியாக 10 இலட்சம் ரூபாயை (இந்திய ரூபாய்) திகார் சிறை கைதிகள் வழங்கியுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி ஆயிரக் கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
இந்த பேரிடரால் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர் சேதத்திற்கு ஆளான உத்தரகாண்ட் மாநிலத்திற்கு நிவாரண உதவி வழங்குவதற்காக திகார் சிறை கைதிகள் ஒன்று திரண்டு தங்களின் தின சம்பளத்திலிருந்து ஒரு தொகையை ஒதுக்கி சுமார் 10 இலட்சம் ரூபாயை அளித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள திகார் சிறை கைதிகளில் சிலர் மற்றும் ஊழியர்கள் சேர்ந்து ரூ.10 இலட்சம் ரூபாயை உத்தரகாண்ட் மாநிலத்திற்கு நிவாரண உதவியாக வழங்கியுள்ளனர். அதற்கான காசோலையை சிறைத்துறை டைரக்டர் ஜெனரல் விம்லா மெஹ்ரா டெல்லி முதலமைச்சர் ஷீலா திக்சித்திடம் அளித்தார். இது குறித்து திகார் சிறை செய்தித் தொடர்பாளர் சுனில் குப்தா கூறுகையில், திகார் சிறை கைதிகள் தங்கள் தினசரி வருமானத்தில் இருந்து இந்த நிவாரண தொகையை அளித்துள்ளனர்.
இத்தொகை அங்கு வெள்ளத்தில் சிக்கி தவிப்போருக்கு உணவு அளிக்கப்பயன்படும் என்றும் இதில் அதிகபட்சமாக மூன்றாம் எண் சிறையில் உள்ளவர்கள் ரூ.3.5 இலட்சம் அளித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !