தமிழக முகாம் வாழ் இலங்கை அகதிகள் 60 பேரை சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்ல முயன்ற நால்வர் 'கியூ' பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில், அவுஸ்திரேலியாவுக்கு செல்ல தயாராகி வரும் இலங்கையர் குறித்து நாகை மாவட்ட கடற்கரை பகுதிகளில் 'கியூ' பிரிவு பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நாகை கீச்சாங்குப்பம் பகுதியில் மீன்பிடி விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் புதிதாக இருந்த மர்ம படகு ஒன்றை அவர்கள் கைப்பற்றினர்.
இந்த படகு நாகை மாவட்டம் செருகூரை சேர்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமானது. இந்தப் படகில் 60 இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு கடத்திச் செல்ல முயன்றதும் , பின்னர் அவர்களை அழைத்துச் செல்லும் முயற்சியை கைவிட்டதும் விசாரணைகளின் மூலம் தெரிய வந்தது.
இதனையடுத்து, இலங்கை அகதிகளை அழைத்துச் செல்ல முயன்றதாக மதுரை மாவட்டம் திருவாதவூர் முகாமில் இருக்கும் உமா ரமணன் என்கிற ரமணன், விழுப்புரம் மாவட்டம் கீழ புதுப்பட்டு முகாமை சேர்ந்த பாபு மற்றும் நாமக்கல் மாவட்டம் எம்.மேட்டுப்பட்டி முகாதை சேர்ந்த தயா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களோடு படகு உரிமையாளர் செந்திலும் கைது செய்யப்பட்டார். இவர்கள், நாகை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனையடுத்து, அவர்களை புழல் சிறைக்கு கொண்டு செல்ல பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !