பாஸ்போர்ட் எடுக்க போலி ஆவணங்கள் தயார் செய்து பிடிபட்டு தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணொருவர், தனக்கு பதில் வேறொரு பெண்ணை சிறைக்கு அனுப்பி நூதன ஆள் மாறாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் நடந்த இந்த சம்பவத்தை, சிபிஐ. கண்டுபிடித்ததும், மதுரை நீதிமன்றத்தில் அந்த உண்மைக் குற்றவாளி சரணடைந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மனைவி ஹேமா, இவருக்கு வயது 46. திருச்சியில் இர்ண்டு பாஸ்போர்ட் பெற்றுத் தரும் நிறுவனத்துடன் இவருக்கு தொடர்பு இருந்தது. போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்து கமிஷன் பெற்று பாஸ்போர்ட் மோசடி செய்வதுதான் இவரது வேலை. இந்த மோசடி குறித்து சிபிஐ விசாரணை செய்து ஹேமா உட்பட 5 பேர் மீது வழக்கு தொடர்ந்தது. மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் 2004ஆம் ஆண்டு ஹேமாவுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் ஹேமா ஆனால் பாச்சா பலிக்கவில்லை தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். அங்கு தண்டனை 6 மாதங்களாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் சென்னை மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஹேமா என்ற பெயரில் ஒரு பெண் சரணடைந்தார். அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில்தான் ஹேமா ஏன் மதுரை நீதிமன்றத்தில் சரணடையாமல் சென்னை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று சிபிஐ அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
இது நீதிபதிகள் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட சரணடைந்து கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த அந்தப் பெண்ணை மதுரை கொண்டு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது அந்தப் பெண் தான் ஹேமா வீட்டு வேலைக்காரி என்றும் பணம் கொடுப்பதாக கூறியதால் தான் அவருக்குப் பதிலாக தண்டனை அனுபவிக்க சம்மதம் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உண்மையான ஹேமாவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அவர் தற்போது மதுரை நீதிமன்றத்தில் சரண்டைந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து திருச்சி சிறையில் ஹேமா தண்டனை பெற்றுள்ளார்.
ஆள்மாறாட்டம் செய்ததன் அடிப்படையில் ஹேமா மீது இன்னொரு வழக்கு பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !