தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்து பார்க்கையில் நாட்டை பிளவுபடுத்துவதற்கான வழி தெரிவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை வாக்கு சேகரிக்க மாத்திரம் பயன்படுத்தாது அதற்கு மேல் செல்லுமாயின் அதற்கான தகுந்த மருந்து அரசாங்கத்திடம் உள்ளதென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.
தேர்தல் விஞ்ஞாபனத்தை நாட்டை பிளவுபடுத்த கூட்டமைப்பு பயன்படுத்தாதிருந்தால் தாம் மகிழ்ச்சி அடைவோம் என நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தற்போதுள்ள தேர்தல் முறையின் கீழ் வன்முறைகளை 100% கட்டுப்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டார்.
பெருந்தோட்ட பகுதியில் எந்தவொரு அரசியல் கட்சியும் தன்னாட்சி கோரவில்லை என்றும் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட அவர்கள் முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொண்டமான் மற்றும் திகாம்பரம் ஆகியோரின் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது பாரிய சக்தி எனவும் பெருந்தோட்ட மக்கள் அரசுடன் கைகோர்த்துள்ளதாகவும் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !