இந்தியா, அகர்தலா அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கக் கூடிய வல்லமை படைத்த அக்னி 5 ஏவுகணையை இன்று 2வது முறையாக வெற்றிகரமாக ஏவி பரிசோதித்துள்ளது.
முற்றிலும் இந்தியத் தொலைநுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏவுகணை இது. இந்த ஏவுகணையானது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையும் கூட. கிட்டத்தட்ட 5000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாகக் கூடிய வல்லமை படைத்தது.
அதாவது சீனாவின் பெரும் பகுதியை இந்த ஏவுகணைத் தாக்கக் கூடிய திறன் கொண்டது.
இந்த ஏவுகணை ஏற்கனவே ஒரு முறை ஏவிப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று 2வது முறையாக ஏவப்பட்டது. ஒடிஷாவின் வீலர் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
3 நிலைகளைக் கொண்ட இந்த ஏவுகணையானது, இன்று காலை 8.50 மணிக்கு ஏவிப் பரிசோதிக்கப்பட்டது.
தரையிலிருந்து தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடியது அக்னி 5. இதில் ஒரு டன்னுக்கும் மேலான அணு ஆயுதத்தை ஏற்றி அனுப்பி தாக்கலாம். சோதனையின் முடிவுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
அதன் இறுதியில் ஏவுகணை சோதனை வெற்றி என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 19ம் திகதி இந்த ஏவுகணை முதல் முறையாக பரிசோதிக்கப்பட்டது.
அப்போது அது வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !