
சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதை ரஷ்ய தொலைகாட்சி ஒன்று உறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் சிரியாவின் டயர்எசூர் நகரில் எரிவாயு குழாய் உடைந்ததாக அரசு தகவல்கள் குறிப்பிடுகின்றன. கிழக்கு மத்திய தரைப் பகுதியை நோக்கி ஏவுகணைகள் சென்றதாக ரஷிய தொலைகாட்சி தகவல் தெரிவித்துள்ளது.
சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ரஷிய தூதரகம் ஏவுகணை தாக்குதலை இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ரஷ்ய தொலைக்காட்சியின் இந்த தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டு உயர் அதிகாரி ஒருவர், அன்னிய கப்பலிலிருந்து 2 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் பெய்யானது என்று கூறினார்.
இந்நிலையில் அமெரிக்கப் படையுடன் இணைந்து குண்டு வீசி பயிற்சியில் ஈடுபட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. மத்திய தரைக்கடல் பகுதியில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் இஸ்ரேல் தகவல் அளித்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !