தொலைக்காட்சி பார்ப்பதில் தம்பியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 11 வயது சிறுமி ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்தியாவின் பெங்களூர் காடுகோடி சாதரமங்களாவை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் நவநீதா (வயது 11). இவள் அதே பகுதியில் உள்ள பாடசாலையில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.
நேற்று முன்தினம் தொலைக்காட்சி பார்ப்பது தொடர்பாக நவனீதாவுக்கும், அவரது தம்பிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நவநீதா, வீட்டின் ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டாள்.
அதன் பின்னர் நீண்டநேரமாக அவள் வெளியே வரவில்லை. இதனால் இரவு 10 மணியளவில் தனது மகளை சாப்பிடுவதற்காக பெற்றோர் கூப்பிட்டும் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அங்கு நவநீதா தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதைப் பார்த்த பெற்றோர் கதறி அழுதார்கள். இதுகுறித்து காடுகோடி பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
11 வயது சிறுமிக்கு எமனான தொலைக்காட்சிப்பெட்டி!
Written By TamilDiscovery on Tuesday, September 3, 2013 | 10:40 AM
Related articles
- பாபுவின் ஆசிரமத்திற்குள் கருக்கலைப்பு நிலையம்!
- இந்தியக் கடல் எல்லையில் அமெரிக் கப்பலில் ஆயுதக கடத்தல்?
- சாதுவின் கனவில் மன்னர்: 1,000 டன் தங்கப் புதையலை!
- ஆட்டையைப் போட்ட ஆட்டுடன் நகரமுடியாமல் தவிக்கும் மலைப் பாம்பு.
- நள்ளிரவில் தனியாக வெளியே வந்த ராகுல்: மர்மப் பெண்ணுடன் உரையாடல்!
- பேஸ்புக் அரட்டைக்குத் தடை: மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
Labels:
India
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !