விஜய் படத்தின் ரெகார்ட்டை விஜய் படமே முறியடித்துள்ளதாம். ஜில்லா திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ரூ.18 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாம் சன் டிவி.
சேட்டிலைட் உரிம விற்பனையில் விஜய் நடித்த திரைப்படங்கள் தான் நம்பர் 1 என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
குழந்தைகளின் அண்ணா:
ரஜினிக்கு பிறகு குழந்தைகளால் அதிகம் விரும்பப்படும் நடிகராக உள்ளார் விஜய். எனவே டிவியில் விஜய் நடித்த படங்களை ஒளிபரப்பினால் குட்டீஸ்கள் அதிகம் பார்க்க விரும்புவார்கள்.
சேட்டிலைட் உரிமம்:
விஜய் நடித்த படங்களின் சேட்டிலைட் உரிமைத்தை வாங்க சேனல்களிடையே தனி போட்டியே நிலவுகிறது. அஜீத், சூர்யா படங்களை விட விஜய்யின் படம்தான் அதிக விலைக்கு விற்பனையாகிறதாம்.
தலைவா:
தலைவா படத்தை ரூ. 15 கோடி கொடுத்து சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது.
ஜில்லாவுக்கு அதிகம்:
அதே சமயம் விஜய் நடித்து வெளிவர உள்ள ஜில்லா திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி ரூ.18 கோடிக்கு வாங்கியுள்ளதாம்.
விஜய் நம்பர் 1:
‘ஸ்டுடியோ கிரீன்' நிறுவன அதிபர் கே.ஈ.ஞானவேல் ராஜா நான்கு பெரிய நடிகர்கள் நடித்த படங்களின் சாட்டிலைட் வியாபாரம் குறித்து ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். அதில் விஜய்க்கு தான் முதல் இடம் என்று கூறியுள்ளார்.
தல அஜீத்:
அஜீத் நடித்து திரைக்கு வர உள்ள வீரம் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமம் ரூ.13 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாம்.
சூர்யா, கார்த்தி இதற்கு அடுத்த இடத்தில்:
சூர்யா, கார்த்தி நடித்த படங்கள் விற்பனையாகியுள்ளன. மேலும் கார்த்தி நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா' மற்றும் ‘பிரியாணி' படங்கள் தலா 11 ½ கோடிக்கு விலை போய்யுள்ளதாகவும் கூறியுள்ளார் ஞானவேல்ராஜா.jilla thirai vimarsanam, jilla vimarsanam, ஜில்லா திரை விமர்சனம், ஜில்ல விமர்சனம்.
‘ஜில்லா’ ஷூட்டிங் ‘திடீர்’ நிறுத்தம்:
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாததால் விஜய்யின் ஜில்லா படத்தின் ஷூட்டிங் கேன்சல் செய்யப்பட்டுள்ளது.தலைவா சர்ச்சைகளையெல்லாம் தாண்டி விஜய் குஷி மூடில் நடித்து வரும் படம் தான் ஜில்லா. இந்தப்படத்தில் விஜய்யுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் ஒரு முக்கியமான கேரக்டரின் இணைந்து நடித்து வருகிறார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து வரும் இந்தப்படத்தை நேசன் டைரக்ட் செய்து வருகிறார்.
விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க அவர்களுடம் ரவி மரியா மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் மற்றும்பலர் நடித்து வருகின்றனர்.
இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இதில் மோகன்லாலும் படத்தின் வில்லனான ரவி மரியாவும் மோதிக்கொள்ளும் காட்சிகள் படமாக்க திட்டமிட்டிருந்தார்கள்.
ஆனால் திடீரென நடிகர் மோகன்லாலுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் தற்போது ஜில்லா படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் கிடைத்திருக்கும் கால்ஷீட்டுகளை சும்மா விடக்கூடாது என்று அந்த கேப்பில் சென்னையில் விஜய்யின் ஆக்ஷன் சீன்களை எடுக்க முடிவெடுத்திருக்கிறாராம் டைரக்டர் நேசன்.jilla thirai vimarsanam, jilla vimarsanam, ஜில்லா திரை விமர்சனம், ஜில்ல விமர்சனம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !