
கொலம்பியா தலைநகர் பொகோடோ விமான நிலையத்திலிருந்து கனடா டொராண்டோ நகருக்கு செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்திருந்த ஒரு கர்ப்பிணிப்பெண் மீது, விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் உண்டானது.
அதனைத் தொடர்ந்து அவரைப் பற்றி விசாரணை மேற்கொண்டனர் அதிகாரிகள். அப்போது கர்ப்பம் குறித்து முன்னுக்கு பின் முரணான தகவல்களை அப்பெண் கூறியுள்ளார். இதனால், பெண் அதிகாரி ஒருவர் மூலம், அப்பெண்ணை சோதனை செய்து பார்க்க முடிவு செய்தனர் அதிகாரிகள்.
அதன்படி, அப்பெண்ணை சோதனை செய்த அதிகாரி அப்பெண்ணின் வயிறு மிகவும் கடினமாகவும், அதேசமயம் குளிர்ந்தும் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். மருத்துவ சோதனையில், அப்பெண்ணின் வயிற்றில் 60 ஆயிரம் டொலர் மதிப்புடைய 2 கிலோ எடையுள்ள கொகைன் போதைப்பொருள், ரப்பர் மரத்தின் பால் பசையால் வயிற்றில் ஒட்டி வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, கோகைன் கடத்திய குற்றத்திற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விசாரணையின் முடிவில், அவருக்கு 5 முதல் 8 வருட சிறை தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !