இந்தியாவில் பிச்சை எடுத்து பிழைத்து வந்த 93 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த மர்ம ஆசாமிகள், அவரிடம் இருந்த 2,000 பணம் மற்றும் மூக்குத்தியை திருடிச் சென்றுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், அகமத் நகர் மாவட்டம் புன்டாம்பா என்ற கிராமத்தில், குடும்பத்தினரால் கைவிடப்பட்ட 93 வயது மூதாட்டி, பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தார்.
சாலையோரத்தில் சிறிய குடிசை அமைத்து இரவு நேரங்களில் தங்கியிருந்தார்.
சம்பவத்தன்று இரவு, குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை, மர்ம ஆசாமிகள் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும், அவரை கடுமையாக தாக்கியதோடு அவரிடம் இருந்த ரூ.2,000 மற்றும் மூக்குத்தியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
கயவர்கள் தாக்கியதில் மயங்கிக் கிடந்த மூதாட்டியை மறுநாள் காலையில் அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார் பிரவரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியை கொண்டுச் சென்றனர்.
அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து, பலாத்காரம் மற்றும் திருட்டு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு மூதாட்டி உயிர் பிழைத்தார். இருப்பினும், அவர் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளாததால் அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி குற்றவாளிகளின் விவரங்களை திரட்ட முடியவில்லை.
பாதிக்கப்பட்ட மூதாட்டியிடம் விசாரித்தபோது அவர் தனது குடும்பத்தினர் சிலரது பெயர்களை கூறினார். இதையடுத்து, சம்மந்தப்பட்டவர்களுக்கு பொலிஸார் உடனடியாக தகவல் தெரிவித்தும், அவர்களில் யாரும் மூதாட்டியை தங்களுடன் அழைத்துச் செல்ல தயாராக இல்லை.
இதனால், ‘ஸ்னேகாலயா’ என்ற தொண்டு நிறுவன இல்லத்தில் மூதாட்டி சேர்க்கப்பட்டுள்ளார் என்று அகமத் நகர் எஸ்பி ஆர்.டி.ஷெண்டே தெரிவித்தார்.
இதுதொடர்பாக, ஷெண்டே மேலும் கூறுகையில், ‘இந்த பலாத்காரம் மற்றும் திருட்டில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகள் பற்றி இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
மூதாட்டி முழுமையாக குணமடைந்து அதிர்ச்சியில் இருந்து மீண்ட பிறகு, அவரிடம் விசாரித்தால்தான் குற்றவாளிகள் பற்றிய விவரம், அங்க அடையாளங்கள் தெரியவரும்’ என்றார்.
‘ஸ்னேகாலயா’ இல்ல நிர்வாகி டாக்டர் ராஜேந்திரா கூறுகையில், "பாதிக்கப்பட்ட மூதாட்டி மிகவும் பயந்து போயிருக்கிறார். அவர் இல்லத்துக்கு வந்தபோது யாரையும் நம்ப மறுத்தார்.
கவுன்சலிங் கொடுத்த பிறகு ஓரளவு அவர் பயம் மற்றும் அதிர்ச்சியில் இருந்து மீண்டிருக்கிறார். அவரது கணவர் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இன்னும் தனது கணவர் உயிரோடு இருப்பதாக அடிக்கடி புலம்பி கொண்டிருக்கிறார்" என்றார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !