மூன்று பெண்களைக் கடத்தி வந்து கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 1000 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற 'ஏரியல் காஸ்ட்ரோ' என்ற கைதி சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அமெரிக்கா, ஓஹையோ மாநிலத்தில் வாழ்ந்து வந்த ஏரியல் காஸ்ட்ரோ (53) என்ற ஆசாமி, கடந்த 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டிற்குள் மிச்சேல் நைட் (20), அமெண்டா பெர்ரி (17), கினா டிஜெசஸ் (14) என்ற மூன்று பெண்களை கடத்திச் சென்று வீட்டுச்சிறையில் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளான்.
பத்தாண்டுகளுக்கும் மேலாக ஏரியலின் கட்டுப்பாட்டில் சிறை பட்டுக்கிடந்த அவர்களில் ஒரு பெண், கடந்த மே மாதம் அங்கிருந்து தப்பினார்.
அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏரியல் கைது செய்யப்பட்டான். பின்னர், வீட்டில் அடைப்பட்டுக் கிடந்த மற்ற இரு பெண்களையும், பெர்ரிக்குப் பிறந்த ஆறு வயது சிறுமியையும் பொலிசார் விடுவித்தனர்.
தீவிர விசாரணைக்குப் பிறகு, ஏரியலுக்கு ஆயிரம் ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தனது தண்டனை விவரத்தைக் கேட்டதிலிருந்து மிகவும் மனமுடைந்து, விரக்தியான மனநிலையிலேயே ஏரியல் இருந்ததாகச் சந்தேகம் கொண்ட பொலிசார், அவனைத் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
ஆனபோதும், சிறை காவலர்களின் கண்காணிப்பையும் மீறி அறைக்குள் தூக்கு மாட்டிக்கொண்டு ஏரியல் காஸ்ட்ரோ தற்கொலை செய்து கொண்டான்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !