
கொட்டாவை ஆனந்த கல்லூரியின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் ரீதியான லஞ்சமொன்றை பெற்றுக்கொள்ள முயற்சித்த போது குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலையின் தரம் ஒன்றுக்கு அடுத்த ஆண்டில் அனுமதி பெற்றுக் கொள்வதற்காக சென்ற தாய் ஒருவரிடம் இவ்வாறு பாலியல் ரீதியான லஞ்சத்தை தருமாறு அதிபர் கோரியுள்ளார்.
இது தொடர்பில் குறித்த தாய், லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
பாலியல் ரீதியான லஞ்சத்தை பெற்றுக் கொள்வதற்கு, வெரஹர பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு பாடசாலை அதிபர் சென்ற போது லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவானின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !