சிங்கள தேசத்தில் பிறந்த அனைவரும் சிங்கள பிரஜைகளாகவே இருக்க வேண்டும் என்று, நாம் அனைவரும் சிங்கள பிரஜைகள் என்ற அமைப்பின் தலைவர் ஹர்ஷ ஏகொட தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
சிறுபான்மை இனத்தவர்களுக்கு அவர்களின் அடையாளங்களை கட்டியெழுப்ப சந்தர்ப்பங்களை வழங்குவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது. பல இனங்களாகவும் மொழிகளாகவும் பிளவுப்பட்டு இருக்கும் வரை இனப்பிரச்சினைகளையும் பிரிவினைவாத பிரச்சினைகளையும் நாட்டில் இருந்து களைய முடியாது. இன, மத, மொழி என்ற பெயர்களில் உள்ள அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து ஒரு இனமாக மாற்றுவதன் மூலமே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும்.
இலங்கையின் பெயரை சிங்கள தேராவாத பௌத்த நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இன, மத மொழி பேதமின்றி அனைவரும் ஒன்றாக வாழும் சமூகத்தை ஏற்படுத்த வேண்டும்.
சிங்கள இனம் என்பது ஒரு கலப்பினம். சிங்கள இனம் உருவாக தமிழ் இனத்தவர்கள் பெரும் பங்களிப்பு வழங்கியுள்ளனர். இனங்கள் கலக்கப்படுவதால், இனம் வலுப்படுத்தப்படும். புத்திகூர்மையான தேக ஆரோக்கியமான இனம் உருவாகும். சிங்கள கலாசாரத்திற்குள் சகல இனங்களும் உள்வாங்கப்பட வேண்டும். சிங்கள கலாசாரத்துடன் அனைத்து கலாசாரங்களும் ஒன்றிணைக்கப்பட வேண்டும்.
இது அடிப்படைவாதம் அல்ல. நாட்டை ஒன்றிணைப்பதே எமது நோக்கம் என்றார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !