பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அல்கொய்தா தீவிரவாதிகள் மீது ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல்களில் இதுவரையிலும் தீவிரவாதிகள், பொதுமக்கள் உட்பட 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகளை திசை திருப்பும் தொழில்நுட்பத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் உருவாக்கி இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதாவது, அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் சிக்னல்கள் மூலம் தான் இயக்கப்படுகின்றன. இவற்றை தங்களது சிக்னல்கள் மூலம் வழிமறித்து திசை திருப்புவதற்காக புதிய சிக்னல் முறையை அல்கொய்தா தீவிரவாதிகள் உருவாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலுன்கள் மற்றும் சிறிய ரக ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை அனுப்பி அமெரிக்க ஏவுகணை, ஆளில்லா விமானங்களின் சிக்னல்களை தடுத்து திசை திருப்பம் தொழில் நுட்பத்தையும் அவர்கள் உருவாக்கி உள்ளனர்.
ஆனால் இதுவரை இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !