அக்கரைப்பற்று பிரதேசத்தில் மரம் அரியும் ஆலை ஒன்றில் லொறியில் இருந்து மரம் பறிக்கும் போது, மரம் பறித்தவர் மீது வீழ்ந்ததில் அந்நபர் பரிதாபகரமா உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவத்தனர். இவ்வாறு பாலகம சலிகம கித்துல்கம பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய கே.எல். பிரதீப் என்பவரே உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்று பழைய ஆஸ்பத்திரி வீதியில் உள்ள மரம் அரியும் ஆலை ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவிசாவளை பிரதேசத்தில் இருந்து லொறியில்மரங்களை குறித்த ஆலைக்கு நேற்று மாலை 6.00 மணிக்கு கொண்டுவந்துள்ளனர். லொறியில் இருந்த மரங்களை நிலத்தில் நின்று பறித்துக் கொண்டிருந்தபோது மரம் ஒன்று தவறி அவர் மீது வீழ்ந்ததையடுத்து சம்பவ இடத்திலேயே அவ் இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
லொறியிலிருந்து மரம் இறக்கிய இளைஞன் பரிதாப மரணம்!
Written By TamilDiscovery on Friday, August 23, 2013 | 11:02 PM
Related articles
- சிறுவன் துஸ்பிரையோகம் பிக்குவுக்கு வலைவீச்சு.
- இலங்கையின் புதிய உதயாமாக உருவாகியுள்ள கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை.
- பாலியல் துஸ்பிரயோகம்: பாடசாலை அதிபர் கைது!
- புத்தளம் - அநுராதபுரம் வாகன விபத்தில் மூவர் பரிதாப பலி: ஐவர் படுகாயம்!
- யாழ், பளை - கிளாலி சந்தியில் வாகன விபத்து: இரு இளைஞர்கள் பரிதாப பலி!
- விமான நிலைய அதிவேக வீதியில் சொகுசு பஸ் சேவை.
Labels:
Sri lanka
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !