Headlines News :
Home » » தலைவா ரிலீசுக்கு தடை கோரி வழக்கு: இன்று விசாரணை!

தலைவா ரிலீசுக்கு தடை கோரி வழக்கு: இன்று விசாரணை!

Written By TamilDiscovery on Friday, August 2, 2013 | 10:35 PM

சென்னை சிட்டிசிவில் நீதிமன்றில் அசோக்நகரைச் சேர்ந்த பி.முருகேசன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

என்னிடம் ஏ.எல்.உதயா கடந்த மே 11ஆம் திகதி ரூ.21 லட்சம் கடன் கேட்டார். விஜய் நடிக்கும் தலைவா என்ற படத்தில் நடிப்பதாகவும், சம்பளம் கிடைத்ததும் கடனை திருப்பித் தந்துவிடுவதாகவும் உத்தரவாதம் கொடுத்திருந்தார். அதற்கான கடிதத்தை படத்தின் தயாரிப்பாளர் எஸ்.சந்திரபிரகாஷ், டைரக்டர் ஏ.எல்.விஜய் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

அவர்களும் உதயாவின் வார்த்தைக்கு உறுதி அளித்தனர். இவர்களின் உறுதிமொழியை நம்பி, பணத்தை கொடுத்தேன். இந்த நிலையில் ஆகஸ்டில் தலைவா படம் ரிலீஸ் ஆவதாக பத்திரிகை செய்தி படித்தேன். இதுகுறித்து கேட்டபோது உதயா கொடுத்த பதில் திருப்திகரமாக இல்லை.

கடனை திருப்பித் தரவில்லை என்றால் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக்கூடாது. அனுமதித்தால் எனக்கு பாதிப்பு ஏற்படும். எனவே அந்த படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை சிட்டிசிவில் நீதிமன்றில் இந்த வழக்கு இன்று (சனிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

படத்துக்கு ‘யு’ சர்டிபிகேட்: பின்னணியில் 1 கோடி ரூபாய்?


சென்ஸார் சிக்கலில் சிக்கித் தவித்த ‘தலைவா’ படத்துக்கு ‘யு’ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதன் பின்னணியில் 1 கோடி ரூபாய் பணம் வரை கைமாறியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

எப்போது விஜய் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றி அதற்கு கொடியெல்லாம் தயார் செய்தாரோ, அன்றே அவருக்கும், அவர் நடித்த படங்களுக்கும் பிரச்சனைகள் ஆரம்பமாகி விட்டது. அப்படித்தான் துப்பாக்கி படத்தை தொடர்ந்து, விஜய் நடித்த ‘தலைவா’ படம் இன்னும் சென்ஸார் சிக்கலிலிருந்து மீளவில்லை, அதனால் திட்டமிட்டபடி படம் வருகிற 9-ஆம் தேதி ரம்ஜானுக்கு ரிலீஸாகுமா..? என்ற சந்தேகம் இன்று காலை வரை இருந்து வந்தது.

‘தலைவா’ படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து இந்த மாதம் 9- ஆம் தேதி ரிலீஸாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘தலைவா’ படத்துக்கு U/A சர்டிபிகேட்டை கொடுத்து சென்ஸார் போர்டு. U சர்டிபிகேட் கிடைத்தால் மட்டும் தமிழக அரசின் வரிச்சலுகைக்கு ஒரு படம் தகுதி பெறும் என்பது விதி.

50 கோடி, 100 கோடி என வருமானம் வரும் பெரிய பட ரீலீஸில் இந்த வரிச்சலுகை என்பது பெரிய பங்கு வகிக்கிறது. எனவே பெரிய தொகை கொடுத்து வாங்கிய வேந்தர் மூவிஸ் நிறுவனம் கூட டென்ஷனில் கொதித்துப் போனார்களாம். இதனால் மீண்டும் ‘தலைவா’ படத்தை சென்ஸாருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு அதன்படி படத்தைப் பார்த்த சென்சார் போர்டு ரிவைஷிங் கமிட்டி மெம்பர்கள் தற்போது படத்துக்கு அவர்கள் கேட்டபடி யு சர்டிஃபிகேட் கொடுத்திருக்கிறார்களாம். இதனால் ‘தலைவா’ படம் திட்டமிட்டபடி வருகிற 9-ஆம் தேதி ரம்ஜானுக்கு ரிலீஸாகிறது.

ஆனால் ‘யு’ சர்டிபிகேட் வாங்கியதன் பின்னணியில் சுமார் 1 கோடி ரூபாய் பணம் கைமாறியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதில் விஜய்க்கு எதிராக அரசியல் தலையீடு இருந்ததால் தலைவா படத்தயாரிப்பாளர் சார்பில் இந்தப்பணம் கொடுக்கப்பட்டதாகவும், அதனால் தான் இந்த ரிலீஸ் சிக்கல் சுமுகமாக முடிந்தது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் ‘யு’ சர்டிபிகேட் வாங்கவில்லை என்றால் நாங்கள் சுமார் இரண்டரை கோடி ரூபாயை கழித்து விட்டுத்தான் மீதிப் பணத்தை தருவோம் என்று படத்தை வாங்கிய வேந்தர் மூவிஸ் நிறுவனம் தெரிவித்ததாம்.

உங்களிடம் இரண்டரை கோடி, இழப்பதை விட அங்கே 1 கோடி, கொடுத்து விட்டுப் போகலாம் என்று தயாரிப்பு தரப்பில் கணக்கு போட்டிருப்பார்கள் போலிருக்கு. இப்போது பிரச்சனை எல்லாம் ஓவராகி படம் ரிலீஸுக்கு தயாராகி விட்டதாம்.

அனேகமாக நாளை காலை பேப்பர்களில் ரிலீஸ் தேதியோடு ‘தலைவா’ விளம்பரம் வெளிவரலாம்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template