ஜப்பானின் ககோஷிமா நகர் அருகே உள்ள 1117 மீட்டர் உயரமுடைய சகுரஜிமா எரிமலை நேற்று மாலை வெடித்து சிதறியது.
சுமார் 5,000 மீட்டர் தூரத்திற்கு மேலே சாம்பலை பீய்ச்சி அடித்தது கண்கவர் காட்சியாக அமைந்தது.
இருந்தும் எரிமலை சாம்பல் அந்த நகரின் பெரும்பாலான பகுதியில் பறந்ததால் ரயில், பஸ் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் லைட் போட்டு சென்றன.
இதிலிருந்து வெளியேறிய எரிமலைக் குழம்பானது ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வழிந்தோடியது. இந்த ஆண்டில் சகுரஜிமா எரிமலை 500-வது முறையாக நேற்று வெடித்து சிதறியது என்று கூறப்படுகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !