இலங்கைக்கு இதுவரை சென்றிராத மிகப் பெரிய கப்பல் எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளது என இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தை விரிவுபடுத்தும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள கொழும்பு தெற்கு துறைமுகம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் திங்கட் கிழமை திறந்து வைக்கப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு, பிரான்ஸூக்கு சொந்தமான போககஸ் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளதாக அதிகாரசபை கூறியுள்ளது.
ஜோட்டாரில் இருந்து புறப்படும் இந்த கப்பல் திங்கட் கிழமை அதிகாலை கொழும்பு துறைமுகத்தை சென்றடைய உள்ளது.
பிரான்ஸின் மிகப் பெரிய சரக்கு கப்பல் இலங்கைக்கு வருவது மிகவும் முக்கியமான நிகழ்வு எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !