இலங்கையில் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டில் ஆயுததாரிகள் நடத்திய கொள்ளைச் சம்பவத்துடன் தமக்கு தொடர்பு இல்லை என்று இலங்கை இராணுவம் கூறுகிறது.
ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயில் அபேவிக்ரமவின் வீட்டுக்குள் புகுந்த 5 ஆயுததாரிகள் அவரை கத்திமுனையில் வைத்திருந்து வீட்டுக்குள் தேடுதல் நடத்தியிருந்தனர்.
ஆயுததாரிகளில் இருவர் தமது இராணுவத்தின் முன்னாள் வீரர்கள் என்று இலங்கை இராணுவம் ஒத்துக்கொள்கிறது.
ஆனால் அவர்கள் குற்றக்கும்பலைச் சேர்ந்த கொள்ளையர்கள் என்று ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
ஆனால் மந்தனா இஸ்மாயிலின் ஊடகத் தொழிலுடன் இந்த சம்பவம் தொடர்புபட்டிருப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் கூறுகிறது.
´ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயிலின் வீட்டுக்குள் புகுந்தவர்கள் கொள்ளையர்கள் என்றால் அவர்கள் இரண்டரை மணிநேரம் ஆவணங்களை தேடித் தேடிக் கொண்டிருந்திருப்பார்களா´ என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.
தொடர்புடைய செய்தி
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !