
அமெரிக்காவை சேர்ந்த ஒரு சாகச வீரர், கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு பெட்டிக்குள் அடைக்கப்பட்டு சுமார் 14,500 அடி உயரத்திலிருந்து விமானத்திலிருந்து தள்ளபட்டார்.
தனது கைகளை விடுவித்துக்கொண்ட மார்டின், பெட்டியிலிருந்து வெளிவந்து உயிரை காபாற்றிக்கொண்டிருக்கிறார். அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலம், ஷெபோய்கன் பகுதியை சேர்ந்த அந்தோனி மார்டின். 47 வயதாகும் இவருக்கு சாகசங்களில் ஈடுபடுவது மிகவும் பிடித்தமான ஒன்று.
கடந்த 25 ஆண்டுகளாக இது போன்ற சாகசங்களைச் செய்து வரும் மார்டின் தற்போது ஒரு புதிய சாதனையை புரிந்துள்ளார்.
இதன்படி, மார்டின் சொன்னதுப்படி அவர் கைகள் சங்கிலியால் கட்டப்பட்டு, ஒரு பெரிய பெட்டிக்குள் அடைக்கபட்டார். அந்த பெட்டி வெளியில் இருந்து பூட்டப்பட்டு சுமார் 14500 அடி உயரத்தில் இருந்து விமானம் மூலம் கீழே தள்ளப்பட்டது.
அப்பெட்டி மணிக்கு 193 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. இடைப்பட்ட நேரத்தில் அதாவது பெட்டி வானத்தில் இருந்து பூமியை அடையும் நேரத்திற்க்குள் மார்டின் தனது கை விலங்கை உடைத்து, பெட்டியைத் திறந்து பாராசூட்டை மாட்டிக் கொண்டு பறந்ததை கண்டு அனைவரும் ஆச்சிரியத்தில் உறைந்தனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !