சிம்பு - ஹன்சிகா இருவரும் இணைந்து நடித்து வரும் ´வாலு´ திரைப்படம் தயாராகி வருகிறது. அதனைத் தொடர்ந்து ´வேட்டை மன்னன்´ தயாராக இருக்கிறது.
இதற்கிடையில் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பின.
இச்செய்தி குறித்து இருவருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சிம்புவின் அப்பா டி.ஆர் "அவன் யாரை கட்டிகிட்டு வந்தாலும் நான் ஏத்துப்பேன். அது ஹன்சிகா இருந்தா சந்தோஷம்" என்று இச்செய்திக்கு மீண்டும் தீயூட்டினார். இந்நிலையில் ´சிம்புவும் நானும் நண்பர்கள் மட்டுமே´ என்று பேட்டியளித்தார் ஹன்சிகா. அதனைத் தொடர்ந்து சிம்பு - ஹன்சிகா இருவருமே பிரிந்து விட்டதாகவும், ஆகவே இவர்களது திருமணம் நடைபெற வாய்ப்பில்லை என்றும் செய்திகள் வெளிவந்தன.
தற்போது சிம்பு, ஹன்சிகா இருவருமே தங்களது காதலை பகிரங்கமாக தங்களது டிவிட்டர் இணையத்தில் அறிவித்து இருக்கிறார்கள். இது குறித்து முதல் அறிவித்தது ஹன்சிகா தான். ஹன்சிகா தனது டிவிட்டர் இணையத்தில் "எனது வாழ்க்கை குறித்து பல்வேறு வதந்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இப்போது சொல்கிறேன். நான் சிம்புவை பார்க்கிறேன். ஆனால் எனது சொந்த வாழ்க்கை குறித்து இப்போதைக்கு எதுவும் கூற முடியாது" என்று தெரிவித்து இருக்கிறார்.
சிம்பு தனது டிவிட்டர் இணையத்தில் "மீடியாக்கள் எனது சொந்த வாழ்க்கை குறித்து தவறான தகவல்கள் அளிப்பதை நிறுத்த வேண்டும். ஆம்! நான் ஹன்சிகாவுடன் தான் இப்போது இருக்கிறேன். ஹன்சிகாவும் நல்லவிதமாக தான் இருக்கிறார். கல்யாணம் குறித்து எனது குடும்பம் தான் முடிவு செய்ய வேண்டும்." என்று தெரிவித்து இருக்கிறார்.
அதுமட்டுமன்றி ஹன்சிகா கூறியிருப்பதையும் RETWEET செய்து தங்களது காதலின் நிலை குறித்து விளக்கி இருக்கிறார்கள்.
சிம்பு - ஹன்சிகா காதல் "டுவிட்டரில்" பகிரங்கமானது!
Written By TamilDiscovery on Friday, July 19, 2013 | 9:59 PM
Related articles
Labels:
Cinema
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !