தான் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டது தொடர்பில் டுபாய் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த நோர்வே பெண்ணொருவருக்கு அந்நாட்டு நீதிமன்றமொன்று 16 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
உள்ளக வடிவமைப்பாளரான மார்ரி டெபோரா டலெவ் என்ற மேற்படி பெண் வாணிப நோக்கில் டுபாயிற்கு சுற்றுலாவை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவர் (24 வயது) பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து தான் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை குறித்து டெபோரா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் திருமணத்திற்கு அப்பாலான பாலியல் உறவு, மதுபானம் அருந்தியமை, பொய்ச்சாட்சி கூறியமை ஆகிய குற்றச்சாட்டில் அவரை பொலிஸார் கைது செய்து கடந்த வாரம் நீதிமன்றத்தில் நிறுத்திய போது நீதிபதி மேற்படி சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
தனக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப் போவதாக டெபோரா கூறினார். இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ளது. கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதி இரவு வேளையில் தனது சகாக்களுடன் வெளியில் சென்ற போதே தான் பாலியல் வல்லுறக்குட்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
டெபோராவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தால் மனித உரிமைக்குழுக்களும் நோர்வேயிலுள்ள அதிகாரிகளும் கடும் சினமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !