இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் 3970 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட அம்பாறை றம்புக்கன் ஓயா நீர்த்தேக்கத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை மகா ஓயா பெல்லேபெத்தையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
இன்று இப்பிரதேச மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த இத்திட்டத்தினால் இம்மாவட்டம் விவசாயத்துறையில் தன்னிறைவு பெறும். இத்திட்டத்தினூடாக இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு விடிவு பிறந்துள்ளது. மஹிந்த மூலமாக எமது நாடு படிப்படியாக அபிவிருத்தி கண்டு வருகிறது. இதனை நீங்கள் அறிவீர்கள்.
அம்பாந்தோட்டை, தம்புள்ளை, அநுராதபுரம், குருணாகல், தெதுறு ஓயா ஆகிய திட்டங்களைப் போன்ற மொறகஹாகந்த, உமா ஓயா, வடமத்திய சிற்றாறு, தெதுறு ஓயா, மாணிக்ககங்கை, யான்ஓயா, கிரம ஓயா, மன்னார், மல்வத்தை ஓயா போன்ற நீர்ப்பாசனத் திட்டங்கள் எதிர்காலங்களில் திறந்து வைக்கப்படவுள்ளன.
30 வருட யுத்தம் முடிவுக்கு வந்து இரத்தம் சிந்திய மக்களுக்கு இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !