ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உகண்டாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
உகண்டாவிற்கு சென்ற பாதுகாப்பு செயலாளருக்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஹோடொங் வரவேற்பு அளித்துள்ளார்.
உகண்டாவில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மொசிவேனி மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கானநாதன் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் சீனி உற்பத்தி தொடர்பில் இச்சந்திப்பில் கூடிய கவனம் செலுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !