Headlines News :
Home » » இந்தியக் காதலன் வீட்டின் முன் விஷம் அருந்திய 23 வயது இலங்கை பெண்!

இந்தியக் காதலன் வீட்டின் முன் விஷம் அருந்திய 23 வயது இலங்கை பெண்!

Written By TamilDiscovery on Sunday, July 21, 2013 | 7:42 AM

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கோலார் - ஸ்ரீனிவாசபுர் பகுதியில் இலங்கை பெண் ஒருவர் தனது காதலன் வீட்டுக்கு முன்னால் நின்று விஷம் அருந்தியுள்ளார்.

23 வயதுடைய என்ற பெண்ணே நேற்று (20) இரவு இவ்வாறு விஷம் அருந்தியுள்ளார். இதனையடுத்து குறித்த பெண் உடனடியாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் அரச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இலங்கையில் ஒரு மேசனின் மகளான குறித்த பெண் 5 வருடங்களுக்கு முன் குவைத் வேலை வாய்ப்புக்குச் சென்றுள்ளார்.

அங்கு தொழிற்சாலை ஒன்றில் தையல் வேலை செய்த குறித்த பெண் அங்கு சாரதி வேலை செய்த பசா என்ற நபரை சந்தித்துள்ளார். அங்கு பசா திருமணம் முடிப்பதாக வாக்குறுதி அளித்து அவருடன் காதல் புரிந்துள்ளார். ஆனால் நாடு திரும்பி மூன்று மாதங்களுக்கு முன் உள்ளூர் பெண் ஒருவரை திருமணம் முடித்துள்ளார்.

இந்நிலையில் இந்தியா சென்ற இலங்கை பெண் விசா காலாவதியானதால் இலங்கைக்கோ குவைத்துக்கோ செல்ல முடியாது எனவும் கையில் பணம் இல்லை எனவும் பசாவை திருமணம் முடித்து ஸ்ரீனிவாசபுர் பகுதியிலேயே வசிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் காதலன் வீட்டுக்கு முன் நின்று விரக்தியில் விஷம் அருந்தியுள்ளார்.

அவருடைய நிலை தற்போது கவலைக்கிடம் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பசா என்ற நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template