ஃபேஸ்புக் நிறுவுனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் (Mark Zuckerberg) பக்கத்தை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹேக்கர் ஹேக் (hacked) செய்துள்ளார்.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணர் கலீல் ஷ்ரியாதே. அவர் ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு குழுவை தொடர்பு கொண்டு புகார் கூறினார்.
அதாவது
ஃபேஸ்புக்கில் யாருடைய கணக்கின் பக்கத்திலும் (wall) யார் வேண்டுமானாலும்
எழுதும் வகையில் உள்ளது. இது பாதுகாப்பானது இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அதை ஃபேஸ்புக் குழு கண்டுகொள்ளவில்லை. வழக்கமாக ஃபேஸ்புக்
பாதுகாப்பில் ஏதாவது பிரச்சனை (bug) இருப்பதை கண்டுபிடித்து தெரிவித்தால்
பரிசு அளிப்பார்கள். ஆனால் அவர்கள் கலீலிடம் இப்படி ஒரு பிரச்சினையே இல்லை
என்று தெரிவித்துவிட்டனர்.
இதனால் கடுப்பான கலீல் ஃபேஸ்புக் நிறுவுனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் பக்கதை ஹேக் செய்து அதில் புகாரை தெரிவித்துள்ளார்.
ஜுக்கர்பெர்க்கின்
பக்கத்தில் (wall) கலீல் கூறியிருப்பதாவது, என் பெயர் கலீல் ஷ்ரியாதே.
நான் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸில் பி.ஏ. முடித்துள்ளேன். உங்களின்
(www.facebook.com) இணையதளத்தில் ஒரு பக்கை (bug) கண்டுபிடித்துள்ளேன். அது
குறித்து உங்களிடம் புகார் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த பக் (bug)
மூலம் ஒரு ஃபேஸ்புக் யூசர் மற்றொரு யூசரின் பக்கத்தில் (wall) எழுத
முடிகிறது.
நான் சாரா. குடின் என்பவரின் பக்கத்தில்
எழுதியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தில் வாழும் கலீலுக்கு
ஜக்கர்பர்க்குடன் ஹார்வர்டில் படித்த சாராவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இதை எப்படி செய்தார் எனபதை ஒரு வீடியோவாக பகிர்ந்துள்ளார்.
Home »
Technology
» ஃபேஸ்புக் நிறுவுனரின் பக்கத்தையே ஹேக் செய்த பாலஸ்தீனியர்: 'மார்க்'குக்கே இந்த நிலை!
ஃபேஸ்புக் நிறுவுனரின் பக்கத்தையே ஹேக் செய்த பாலஸ்தீனியர்: 'மார்க்'குக்கே இந்த நிலை!
Written By TamilDiscovery on Monday, August 19, 2013 | 5:16 AM
Labels:
Technology
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !