ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான உறவு அவ்வளவு சுலபமானது அல்ல. அது ஒரு சிக்கலான உறவே. இந்த உறவு நீடித்து செல்வதற்கு, இருவருமே மனமார்ந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதிலும் காதல் ரசத்துடன் ஆரம்பிக்கும் இந்த உறவு, திருமண வாழ்வில் நாட்கள் ஓட ஓட பல தருணங்களை எதிர்கொள்ள பொறுமையும், தன்னடக்கமும் தேவை.
குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பினாலும், வீட்டு வேலைகளுக்காக அங்கும் இங்கும் ஓடுவதாலும் டென்ஷன் ஏற்படுவதுண்டு. இதனால் தம்பதியினருக்கு இடையே பிரச்சனைகள் எழலாம். ஆனால் யாரால் இந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து தடைகளை கடந்து போக முடிகிறதோ, அவர்களால் தான் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை வாழ முடியும். அதிலும் குழந்தைகளுக்காக பெண்கள் தங்கள் திருமண வாழ்வு வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுவார்கள். தங்களின் பாதுகாப்பு தேவையை மனதில் வைத்து கொண்டே, கணவனுடன் திருமண பந்தத்தில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் நிதிக்காகவும், பெண்கள் தங்கள் கணவனை சார்ந்தே வாழ்கின்றனர். இருப்பினும் ஒரு கட்டத்தில் தன் கணவனை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலைகள் பெண்களுக்கு ஏற்படும்.
உயிரே இல்லாத ஒரு உறவோடு வாழ்வதற்கு பதிலாக, விவாகரத்து பெறுவதே சிறந்த வழி என்று எண்ணுவார்கள். அதிலும் இந்த காலத்தில் பெண்களை ஆண்கள் தன் மனம் போன போக்கில் ஆட்டி வைக்க முடியாது. பெண்களும் விவாகரத்து கோரி நீதிமன்றம் படியேறும் காலம் வந்துவிட்டது. இப்போது பெண்கள் ஆண்களை ஏன் விவாகரத்து செய்ய விரும்புகிறார்கள் என்று பார்க்கலாமா!!!
நம்பிக்கை துரோகம்:
கணவன்மார்கள் தங்கள் மனைவிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்தால், பெண்கள் விவாகரத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். திருமணமான போதிலும் கூட, ஆண்களுக்கு சபல புத்தி இருக்கக்கூடும். பிற பெண்களின் வலையில் எளிதில் விழுந்து விடுவார்கள். இதனைப் படித்த பெண்களால் சகித்துக் கொள்ள முடியாமல் தான் பெண்கள் விவாகரத்தை விரும்புகிறார்கள்.
முரட்டுத்தனமான நடவடிக்கை:
சுயமாக சம்பாதிக்கும் பெண்ணாக இருந்தாலும், அவர்கள் விவாகரத்து கோருவதற்கு வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக கணவன்மார்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலோ அல்லது தாங்க முடியாத குணாதிசயத்தோடு நடந்தாலோ, பெண்கள் இந்த முடிவை எடுப்பார்கள். ஏனெனல் நிதி விஷயத்தில் யாரையும் சாராமல் சுயமாக சம்பாதிப்பதால், பெண்களுக்கு இந்த தைரியம் வருகிறது.
மற்றவர் மீது ஆசை:
திருமணமான பெண்ணுக்கு மற்ற ஆணுடன் ஈர்ப்பு அல்லது தொடர்பு இருந்தாலும், அது அப்பெண்ணை விவாகரத்து கேட்க தூண்டும். இன்றைய காலக்கட்டத்தில் பல பெண்களுக்கு பிற ஆண்களின் மேல் காதல் வருவதால், அவரை மணந்து கொள்ள தற்போதைய கணவனை விவாகரத்து செய்ய விரும்புவார்கள்.
மூன்றாம் நபர்:
குடும்ப சுமைகள் மற்றும் பிரச்சனைகளும் கூட ஒரு பெண் விவாகரத்து கோர ஒரு காரணமாகும். சில சமயம் பெண்களுக்கு மாமியாரின் தொந்தரவு அதிகரிக்கலாம். மாமியார் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கலாம். இது பெண்களுக்கு பிடிக்காமல் போகலாம். கிழக்கு பக்கம் பல பேர் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வந்தாலும், இப்போது அதெல்லாம் மாறி வருகிறது. பெரும்பாலும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆதரவு இல்லாததாலும், பிரச்சனைகள் மூண்டு விவாகரத்தில் போய் நிற்கிறது. மேலும் இக்காலத்து பெண்கள் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்கள் தன்னுடைய திருமண வாழ்வில் தலையிடுவதை விரும்புவதில்லை. ஆனால் மேற்கு பக்கம் இப்படி நடப்பதில்லை. ஆனால் சிலநேரம் கணவன் தன் தாயின் மீது அதிக பற்றுதலை காட்டும் போதும், மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்தில் போய் முடியும்.
சலிப்புத்தன்மை:
சலிப்புத்தன்மையும், பெண்கள் விவாகரத்து கோருவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. அதிலும் பெண்களுக்கு தங்களுடைய திருமண வாழ்க்கை ஒரே மாதிரியாக போய் கொண்டிருந்தால், அது அலுப்புத் தட்டிவிடுவதோடு, விவாகரத்தையும் கேட்க வைக்கும்.
உடலுறவில் பிரச்சனை:
கணவன் உடலுறவில் தகுதியில்லாமல் இருந்தாலும், அந்த காரணத்திற்காகவும் ஒரு பெண் விவாகரத்து கோருவாள்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !