பாலியல் தொந்தரவு காரணமாக ஓடும் ரயிலில் இருந்து பெண் எஞ்ஜினியர் ஒருவர் குதித்து படுகாயமடைந்துள்ளார்.
பாலி மற்றும் பெலூர் ஸ்டேசன் இடையே ஓடும் ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலில் 25 வயது பெண்ணொருவர் பயணம் செய்துள்ளார்.
கொல்காத்தாவில் இருந்து 42 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பான்டெல் ஸ்டேசன் வந்த போது அவர் பயணம் செய்த பெட்டி காலியான போது அடையாளம் தெரியாத நபரொருவர் அந்தப் பெட்டியில் ஏறியுள்ளார். தொடக்கம் முதலே அந்தப் பெண்ணை சீண்டியபடியும், அருவெறுப்பான பேச்சு பேசிய அந்த நபர், ஒருமணி நேரம் அந்தப் பெண்ணை டார்ச்சர் செய்துள்ளார்.
இதனால் வெறுத்துப் போன அந்தப் பெண் அவனிடமிருந்து தப்பிக்க ஓடும் ரயிலிலிருந்து குதித்துள்ளார். இதில் அந்தப் பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்தது பாலி ஸ்டேசன் அருகில் என்பதால் உடனடியாக அப்பெண்ணை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவ செலவு முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
அந்தப் பெண் கொல்கத்தாவில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் எஞ்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிசார் பாலியல் தொந்தரவு செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !