தக்கலை பகுதியில் தன் மனைவியை கொலை செய்த வழக்கில் 9 ஆண்டுகளுக்கு பின்பு குற்றவாளி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தக்கலை அருகே உள்ள கூலக்கடை வெளிஞானத்து கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 42). கூலித்தொழிலாளி இவரது மனைவி ராணி. கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2004ம் ஆண்டு ராஜேந்திரன் மது குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து உதைத்ததில் ராணி பரிதாபமாக இறந்து விட்டார். இதனால் பயந்து போன ராஜேந்திரன் தலைமறைவானார்.
இது குறித்து கொற்றியோடு பொலிசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராஜேந்திரனை தேடி வந்துள்ளனர். ஆனால் அவரை கைது செய்ய இயலவில்லை. இந்நிலையில் 9 ஆண்டுகளுக்கு பின்பு ராஜேந்திரன் களியக்காவிளையில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்து இருப்பதாக கொற்றியோடு பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சப்–இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையிலான பொலிசார் அங்கு சென்று ராஜேந்திரனை கைது செய்தனர். விசாரணையில் அவர் கடந்த 9 வருடங்களாக கேரளாவில் தலைமறைவாக வாழ்ந்தது தெரியவந்ததுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !