கல்கிஸ்ஸ - சேரம் வீதியில் இயங்கிவந்த நடமாடும் விபச்சார நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
கார் மற்றும் முச்சக்கரவண்டியை பயன்படுத்தி இயங்கிவந்த விபச்சார நிலையமே நேற்று (09) இரவு இவ்வாறு முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது விபச்சார தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 4 பெண்களும் விபச்சாரத்துடன் தொடர்புடைய நான்கு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான பெண்கள் 23 தொடக்கம் 30 வயதுகளை உடையவர்கள் எனவும் அவர்கள் குண்டசாலை, தங்கொட்டுவ, நிவித்திகல, பேராதனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் முச்சக்கரவண்டியை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (10) கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
விபச்சார
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !