Headlines News :
Home » » தமிழரை கல்யாணம் பண்ணினா என்ன தப்பு? நஸ்ரீயா.

தமிழரை கல்யாணம் பண்ணினா என்ன தப்பு? நஸ்ரீயா.

Written By TamilDiscovery on Saturday, July 6, 2013 | 6:54 AM

எந்தவொரு மலையாள நடிகையும் சொல்லாத பதிலை சொல்லி தமிழர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார் நஸ்ரீயா. அது என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் ஒரு சிறு முன்னுரை.

கோடம்பாக்கத்தின் ஹாட்லைன் கேரளாவில்தான் முடிகிறது. அந்தளவுக்கு அங்கிருந்து நடிகைகளை இறக்குமதி செய்கிறது தமிழ்சினிமா. இந்த சினிமாவுலகத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஒரு நடிகையாவது நம்ம தமிழ் ஹீரோக்களை லவ் பண்றாங்களா? இல்லை கல்யாணம்தான் பண்ணிக்கிறாங்களா?

இப்படி பெரூமூச்சு ரசிகர்கள் மத்தியில் இருந்தாலும், பாரதிராஜாவின் மகன் மனோஜ் நந்தனா என்ற கேரள நடிகையை திருமணம் செய்து கொண்டதை யாரும் கணக்கிலேயே வைத்துக் கொள்வதில்லை. அண்மையில் ரம்யா நம்பீசன் அளித்த பேட்டியில் கூட, தமிழில் நடிக்க பிடிக்கும். ஆனால் கணவர் என்றால் அது எங்க மண்ணை சேர்ந்தவரை மட்டும்தான் கட்டிப்பேன் என்று பதிலளித்திருந்தார். அநேமாக எல்லா கேரள நடிகைகள் மத்தியிலும் இந்த மனப்பான்மைதான் எதிரொலிக்கிறது. (நயன்தாரா விஷயமே வேறு. ரொம்ப சிக்கலுக்குரியது அது)

சரி, நஸ்ரீயா என்ன சொன்னார்? என் மனம் கவர்ந்தவர் தமிழராக இருந்தால் கண்டிப்பாக கல்யாணம் செய்து கொள்வேன். ஏன் தமிழர்களிடம் அறிவில்லையா? அழகில்லையா? திருமணம் செய்து கொண்டால் என்ன தவறு? இப்படி கேள்வி மேல் கேள்வியாக அவர் கேட்பதால், அடித்து பிடித்துக் கொண்டு அவர் முன் போய் நிற்க யாருக்கெல்லாம் தோணுதோ... போங்க போங்க!
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template