அமெரிக்காவின் எதிரி ஏவுகணையை வழிமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தென் கொரியா மீது போர் தொடுப்போம் என்று வட கொரியா மிரட்டி வருகிறது. இதையடுத்து தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்க முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்துவோம் என்று வட கொரியா மிரட்டி வருகிறது. அப்படி தாக்குதல் நடந்தால் சமாளிக்க அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் எதிரி ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் அதிநவீன ஏவுகணையை அமெரிக்க இராணுவம் நேற்று சோதனை செய்தது.
மார்ஷல் தீவில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையை, கலிபோர்னியாவின் வாண்டென்பெர்க் விமான படை தளத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை வழிமறித்து தாக்கும் சோதனை நடத்தப்பட்டது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் நடந்த இந்த சோதனை தோல்வி அடைந்தது.தொழில்நுட்ப கோளாறு காரணமாக சோதனை தோல்வி அடைந்தது என்று இராணுவ தலைமையகம் பென்டகன் தகவல் வெளியிட்டது.
தரையில் இருந்து நீண்ட தூரம் சென்று எதிரி ஏவுகணையை அழிக்கும் அதிநவீன ஏவுகணை சோதனை தொடர்ந்து தோல்வி அடைவது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று ஏவுகணை பாதுகாப்பு முகவர் செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் லெனர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008 மற்றும் 2010ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் தோல்வி அடைந்தன. இப்போது மீண்டும் ஏவுகணை சோதனை தோல்வி அடைந்துள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !