நயன்தாராவும், ஆர்யாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஜோடியாக நடித்தார்கள். தற்போது ராஜா ராணி படத்திலும் இணைந்து நடிக்கின்றனர். நயன்தாராவை தனது வீட்டுக்கு அழைத்து ஆர்யா பிரியாணி விருந்து கொடுத்தும் நெருக்கத்தை வெளிப்படுத்தினார்.
சமீபத்தில் ராஜா ராணி பட விழாவுக்காக தயாரான அழைப்பிதழில் நயன்தாராவும், ஆர்யாவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வது போன்ற படத்தையும் அச்சிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர். இதற்கு பதில் அளித்து நயன்தாரா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ஆர்யாவையும், என்னையும் இணைத்து வதந்திகள் பரவுகின்றன. இதை பொருட்படுத்தவில்லை. எங்களுக்குள் எதுவும் கிடையாது. நாங்கள் இரண்டு படங்களில் சேர்ந்து நடிக்கிறோம். அதனால் தான் இப்படி வதந்தி பரவி உள்ளது. இருவரும் சேர்ந்து நடிப்பது தானாக நடந்தது. விரும்பி நடக்கவில்லை. காதல் விஷயங்களில் இருந்து வெளியே வந்து விட்டேன். இப்போது தனியாக தான் இருக்கிறேன். சில காலம் இதே நிலையில் இருக்க விரும்புகிறேன்.
ஆண்-பெண் பழகினால் காதலாகத்தான் இருக்க வேண்டுமா? நண்பர்களாக இருக்க கூடாதா? நடிகரும், நடிகையும் ஒருத்தருக்கு ஒருத்தர் டேட்டிங் இல்லாமல் நண்பர்களாக வாழ முடியும். நானும் ஆர்யாவும் சாதாரண நண்பர்களாக தான் இருக்கிறோம். அவர் வீட்டில் நடந்த விருந்து பற்றி பேசுகிறார்கள். அங்கு என்னை போல் நிறைய சினிமாக்காரர்கள் வந்து இருந்தார்கள். அவர்களை மறந்துவிட்டு பேசுகின்றனர்.
நாங்கள் வெளியே எங்கும் போகவில்லை. ஆர்யா அவரது இடத்தில் சந்தோஷமாக இருக்கிறார். நான் என் இடத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சில காலம் தனிமையில் இருப்பதே என் முடிவு. காதல் பற்றி சிந்திக்க விரும்பவில்லை. ஆர்யா எனக்கு நல்ல நண்பர். எப்போதும் அப்படியே இருப்பார். எங்களை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
ராஜா ராணி பட அழைப்பிதழில் திருமணம் செய்து கொள்வது போன்று எங்கள் படங்களை அச்சிடப்பட்டு இருந்தது படத்தின் விளம்பரத்துக்காகத்தான். தமிழ், தெலுங்கில் பிசியாக இருக்கிறேன். நல்ல கதையம்சம் உள்ள படங்கள் எனக்கு அமைகின்றன. அஜீத்துடன் மூன்றாவது படத்தில் நடிக்கிறேன். அவர் ஒரு ஜென்டில்மேன். காயம் பட்டதை கூட பொருட்படுத்தாமல் சீரியஸ் ஆக நடிக்க வருகிறார்.
இவ்வாறு நயன்தாரா கூறினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !