இந்து சமய பூசகர் ஒருவரை ஆட்டோவில் அழைத்துச் சென்ற இருவர் அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர் அணிந்திருந்த ஒரு பவுண் தங்கச்சங்கிலியையும் 5 ஆயிரம் ரூபா பணத்தையும் உடைமைகளையும் கொள்ளையடித்துவிட்டு அவரை காட்டுப்பிரதேசத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் பண்டாரவளை டயரபா சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது:-
குறித்த பூசகர் காலை டயரபா தோட்டத்திற்கு வேலை நிமித்தம் சென்றுவிட்டு மதியம் நுவரெலியா செல்வதற்காக டயரபா சந்தியில் பஸ்ஸை எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில் ஆட்டோ ஒன்று அவர் முன் நின்றது.
அவ் ஆட்டோவில் இருந்த இருவர் தாமும் நுவரெலியா செல்வதாகவும் பூசகரையும் தம்முடன் வரும்படியும் பணிவுடன் அழைத்துள்ளனர்.
பூசகரும் அவர்களுடன் ஆட்டோவில் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றவுடன் ஒரு கடையின் முன்னால் ஆட்டோவை நிறுத்தி களைப்பாக இருக்கிறது, குளிர்பானம் அருந்துவோம் எனக்கூறி பூசகருக்கும் வாங்கிக் கொடுத்துள்ளனர். உடனே மயக்கமடைந்த பூசகரிடமிருந்த தங்கச்சங்கிலி, ஐயாயிரம் ரூபா பணம் மற்றும் அவருடைய உடைமைகளையும் கொள்ளையடித்துவிட்டு அவரை சீத்தா எலிய காட்டுப்பகுதியில் விட்டுச் சென்றுள்ளனர்.
இரண்டு நாட்களின் பின் மயக்கம் தெளிவடைந்த பூசகர் பிரதேச மக்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !