அமெரிக்காவின் கொலம்பியா நகரில் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 பேர் பலியாகினர்.
கொலம்பியா நகர் அருகே உள்ள கச்சா எண்ணெய் பைப் லைனை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடது சாரி இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் வெடி வைத்து தகர்த்தனர். இதனால் குழாயில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது.
இந்த கசிவை சீர்படுத்த உள்ளூர் நிர்வாகம் 3 பணியாளர்களை ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வைத்தது. முபாகோட்டா நகரில் இருந்து 380 கி.மீட்டர் தூரத்தில் பறந்துகொண்டிருந்த போது மின்சார ஒயரில் ஹெலிகாப்டரின் விசிறி சிக்கியது.
இதனால், நிலைகுலைந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து வெடித்து தீப்பிழம்பானது.
இந்த விபத்தில் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் 3 பேர், விமானி, துணை விமானி ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !